மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு தேர்வில் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பின்வரும் நாடுகளில் நரேந்திர மோடி பார்வையிடாத நாடு எது?
அ) அமெரிக்கா,
ஆ) ஆஸ்திரேலியா,
இ) இங்கிலாந்து,
ஈ) தென் கொரியா

கேரளாவின் உயர் நீதிமன்றத்திற்கான உதவியாளர் பணிக்காக நடந்த எழுத்துத் தேர்வில்தான் இந்த சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியைப் பார்த்து தான் ஆச்சர்யமடைந்ததாகவும், பிரதமர் மோடியை சீண்டிப் பார்க்கும் நோக்கம் உள்ளவர்களே தேர்வில் இந்த கேள்வியை வைத்திருக்க வேண்டுமென்றும் இந்த தேர்வில் பங்கேற்ற பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கேரள நீதிமன்றம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி