வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளின் அதீத சுறுசுறுப்பும் குறைபாடே எனவும், இதனால், கற்றல் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காந்தி கிராம பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியர் ஜாகிதாபேகம் தெரிவித்தார்.முன்பெல்லாம்,
வகுப்பறை களில் மாணவர்களைக் கையாளு வது ஆசிரியர்களுக்கு சற்று எளி தாக இருந்தது. ஆனால், தற்போது வகுப்பறைகளில் மாணவர்களை அவரவர் இருக்கைகளில் அமைதி யாக அமர வைப்பதே பெரிதும் சிரமமான காரியமாக உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணத்தை மருத்துவர்களும் மனோதத்துவ நிபுணர்களும் கண்டறிந்துள்ளனர். அதுதான் ‘அதீத சுறுசுறுப்பு மற்றும் கவனமின்மை’.இது ஒரு குறைபாடு எனவும், இதனால், மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாக பாதிக்கப்படும் என காந்திகிராம பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியர் ஜாகிதாபேகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் மேலும் கூறியதாவது:‘‘வகுப்பறையில் கற்றலுக்கு கவனம் மிகமிக அவசியம். எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒரே மாதிரியாகக் கற்றுக் கொடுத்தாலும் கவனம் அதிகமாக உள்ளவர்களே சாதனையாளர் ஆகிறார்கள். எனவே மாணவர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் வகையில், ஆசிரியர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
>அறிகுறிகள்
ஆனால், என்னதான் திறமையான ஆசிரியர்களாக இருந்தாலும், சில சமயங்களில் மாணவர்களின் அதீத சுறுசுறுப்பு, கவனமின்மை ஆசிரியர்களை அலைக்கழித்து விடும். இக் குறைபாட்டைக் கண்டறிய இரு பதுக்கும் மேற்பட்ட அறிகுறி கள் உள்ளன. இவற்றில் குழந் தைகள் ஓரிடத்தில் அமராமல், கை, கால்களை அசைத்து கொண்டே இருப்பது, கொடுத்த எந்த ஒரு வேலைகளையும் முழு மையாக முடிக்காமல் பாதியில் விட்டு விடுவது, வகுப்பறையில் ஆசிரியர் கூறும் கருத்துகளை முழுமையாக கேட்காமல் அவசரப் பட்டு பதில், சந்தேகங்கள் கேட்பது உள்ளிட்ட பனிரெண்டுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் உள்ள மாணவர்களுக்கு, மருத்துவர் மற்றும் மனோதத்துவ நிபுணர் களின் ஆலோசனை மிகமிக அவசியம்.
இதற்காக பெற்றோர்கவலைப்படத் தேவையில்லை. இப்பிரச்சினையை எளிதாகத் தீர்த்து விடமுடியும்.இதுதொடர்பாக ஆய்வு மேற் கொண்டபோது, பிரச்சினை உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் அதீத சுறுசுறுப்பைக் குறைத்து, கவனத்தை அதிகரித்து அவர்களின் அடைவுத் திறனையும் அதிகரிக்க நூற்றுக்கும் மேற்பட்ட உத்திகளை கண்டறிந்துள்ளோம்.’’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி