கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2015

கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்!

வெறும் 10 இலக்கம் கொண்ட தொலைபேசி எண்ணையே நினைவு வைத்திருக்க முடியாமல்திணறும் தலைமுறை நம்முடையது. அப்படி இருக்கையில் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவில் வைத்திருக்கும் தமிழரின் அபாரமான நினைவுத்திறனை என்னசொல்லிப் பாராட்டுவது?
பத்து வருடங்களாக இத்தாலியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக பணியாற்றியவர் அரவிந்த்(36). சுற்றுலாப் பயணிகளுடன் பேசுவதற்காக முதலில் இத்தாலி மொழியை கற்றுக்கொண்டார்.

பின்னர் ஸ்பெயின், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் போர்த்துகீஸ் என்று அடுத்தடுத்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.இந்த ஐரோப்பிய மொழிகள் அவருக்கு நினைவுத்திறனை மேம்படுத்தும் பல புதிய உத்திகளை சொல்லிக்கொடுக்க, இவர் தன் நினைவுத்திறனை இன்னும் இன்னும் என்று அதிகரித்துக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் அவருக்கு கோவையில் அயல் மொழி ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.தன் தாய்நாட்டிற்கு திரும்பிய அரவிந்தின் மனதில், தன்னுடைய நினைவுத்திறனை வைத்து ஏதாவது சாதிக்க முடியுமா? என்ற எண்ணம்தான் இருந்தது. இதுவரை உலகில் நினைவுத்திறனை வைத்து சாதித்தவர்கள் பற்றி ஆராய்ந்தார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் 264 இலக்கம் கொண்ட பைனரி தொடர் நினைவுபடுத்தி சொன்னதே கின்னஸ் சாதனை புத்தகத்தில் உச்சகட்ட சாதனையாக இருந்தது.உடனடியாக களத்தில் இறங்கிய அரவிந்த் தன்னுடைய நினைவுத்திறனால் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி, அதை எடிட் செய்யாமல் வீடியோவாக எடுத்து கின்னசுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இவரது அபார சாதனையை அங்கீகரித்து கடந்த வாரம் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழை அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி