ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கேட்டு வாசகர்களிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் எம்.கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் விருப்பப் பாடமாக இயற்பியலை எடுக்கலாமா என ஒரு வாசகர் கேட்டுள்ளார். ஐ.ஐ.டி. போன்ற உயர்தர பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள் அதிக அளவில் இயற்பியலை விருப்பப் பாடமாகக் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த காரணத்தால் இயற்பியல் பாடத் திட்டம் மத்திய அரசுபணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) சற்று கடினமாக்கப்பட்டது.அதனால் அந்தப்பாடம் சற்று கடினமாகவே இருக்கும்.அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம்,வரலாறு, புவியியல், சமூகவியல்,உளவியல் போன்ற அனைத்து விருப்பப்பாடங்களும் தேர்வுக்கானதயாரிப்புக்குச் சற்று எளிமையாகஇருக்கும்.பல்கலைக்கழகங்கள் வழங்கும் முதுநிலைபட்டப்படிப்புகளில் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் தமிழ்வழி புத்தகங்கள்கிடைக்கின்றன. அவற்றை நாம்தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வு ஒன்றே குறிக்கோளாகஇருக்கும் நிலையில் நீங்கள் மேற்கண்டபாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றைஇளங்கலை பாடப்பிரிவாகத்தேர்ந்தெடுக்கலாம்.ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆங்கில அறிவுஅதிகம் தேவையா என்கிறார் ஒருவாசகர். Language Paper-ல் முதனிலைத்தேர்வில் (PRELIMINARY EXAM)கேள்விகளைப் படித்துவிடையளிக்கும் அளவுக்கு ஆங்கிலஅறிவு இருந்தால் போதுமானது.பிரதானத் தேர்வில் (MAIN EXAM)கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தாலும்அதைப் புரிந்துகொண்டு தமிழ்வழியில் விடையளிக்கலாம்.இதற்குப் பிரதானத் தேர்வுக்குவிண்ணப்பிக்கும் போது தமிழ்வழித்தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிவெற்றி பெற்றவர்களையும்தொடர்புகொண்டு தக்க ஆலோசனைபெறலாம்.ஐ.ஏ.எஸ். பாடத்திட்டம், தேர்வு முறைதொடர்பான தகவல்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில்தகவல்கள் உள்ளன. தமிழக அரசு நடத்தும்இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சியில் சேர்ந்துபயிற்சி பெற www.civilservicecoaching.comஎன்ற இணையதளத்தை பார்வையிடவும்.மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகங்களில் இயங்கும் தன்னார்வப்பயிலும் வட்டங்கள் (Study Circle)மூலமாகவும் இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி