மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.


இந்த நிகழ்வு கல்வி துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களின் உடல்நலம், கல்வி பாதிக்கும்.எனவே, பள்ளி, வகுப்பறைகளில் நடத்தப்படும் காலை இறைவணக்க கூட்டத்தின் போதும், நீதிபோதனை கல்வி பாட வேளையின் போதும் மாணவர்களிடம் மதுவால் ஏற்படும் தீமைகள்பற்றி விளக்கி கூறி நல்வழிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த தலைமை ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி