இந்த ஆண்டு விருதுக்கு,
ஆக., 10ம் தேதிக்குள், பட்டியல் அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.இதற்காக, மாவட்ட வாரியாக தேர்வுக் கமிட்டி அமைக்கவும், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், அரசியல்வாதிகள் சிபாரிசு பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த காலங்களில், நல்லாசிரியர் விருதுக்கு, பட்டியலில் இடம் பிடிக்க, பலவிதமாக, 'கவனிக்க' வேண்டியிருந்தது. ஜாதி, மதம், அரசியல் செல்வாக்கு, கல்வித் துறையில் உள்ள தொடர்பு அடிப்படையில், தேர்வுப் பட்டியல் இருந்தது.இந்த ஆண்டு ஊழல் இல்லாத, 100 சதவீதம் தகுதியான, ஆசிரியர்கள் பட்டியலைத் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, அரசியல்வாதிகளின் சிபாரிசு தடுக்கப்பட்டு, சரியான நபர்களுக்கு விருது வழங்கப்படும்.
இதுகுறித்து, மாவட்டத் தேர்வுக் கமிட்டியினர், எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளனர். இதையும் மீறி, பட்டியல் தயாரிப்பில் ஊழல் நடந்தால், மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வுக் கமிட்டி மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம், பள்ளி தேர்ச்சி விகிதம், ஒழுங்கு நடவடிக்கையின்மை, யோகா, நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களையே, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Pg trb exam அறிவிப்பு இந்த மாதம் வர வாய்ப்பு இருக்கிறதா sir?
ReplyDeleteAlex sir pls comments supreme court news
ReplyDeleteWhen will conduct PG TRB exam?
ReplyDelete