ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் புனியா பாராட்டு தெரிவித்துள்ளார். தேசி்ய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாக சென்னைவந்துள்ளனர்.
ஆதிதிராவிட சமூதாயத்தை சேர்ந்த எம்.பிக்கள் , எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை தலைமைசெயலகத்தில் மாநில அளவிலான ஆலோசனையையும் அவர்கள் நடத்தினர். இதன் பின்னர் ஆணையத்தலைவர் புனியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலன்கள் குறித்த விவாதிப்பதற்காக வந்திருக்கிறோம். ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் சுப்ரமணியம், தலைமை செயலாளர் ஞானதேசிகன், காவல்துறை டிஜிபி அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
ஆதிதிராவிடர் சமூதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.தேசிய சராசரியை விட 7 விழுக்காடு கூடுதலாக தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கான சிறப்பு ஆசிரியர் தேர்வு முகாமையே நடத்துவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி