அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி புறக்கணிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2015

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி புறக்கணிப்பு

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கில வழி கல்விக்கு,போதிய வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால்,புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,397தொடக்கப் பள்ளிகள், 271நடுநிலைப் பள்ளிகள், 602உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள் என,மொத்தம், 2,270அரசுபள்ளிகள் உள்ளன.தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களை தடுக்கவும்,அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும்,அரசு, 2012-13ம் கல்வியாண்டு முதல், 1ம் வகுப்பில்,ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டது. பின்,அடுத்த கல்விஆண்டில், 6ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டது.ஆனால்,ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்ட காலத்திலிருந்து,அரசு பள்ளிகளில் தனியாகவகுப்பறை மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்தப்படவில்லை. குற்றச்சாட்டு ஏற்கனவே பணியில் இருந்த ஆசிரியர்களே,ஆங்கில வழி கல்வி பயிற்சி அளித்தனர்.ஆனால்,ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு,தனியாக வகுப்பறை இல்லாததால்,தமிழ் வழி கல்வி கற்கும் மாணவ,மாணவியரோடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து,பள்ளி மாணவர்களுக்கு,ஆங்கில வழி கல்வி என்பது,எட்டாக் கனியாகவே மாறியது. இதற்கு,முழு காரணம் அரசு வழங்கிய இலவச பேருந்து பயண அட்டை தான்,என,மூத்த தலைமையாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதாவது,இரண்டு கிலோ மீட்டரில் ஒரு அரசு பள்ளி என்ற கணக்கில்,பள்ளிகள் துவங்கப்பட்டு,பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால்,அரசு வழங்கும் இலவச பேருந்து பயணஅட்டையால்,பல மாணவர்கள்,தங்கள் பகுதியிலிருந்து அருகிலுள்ள நகருக்கு,படிப்பிற்காக படையெடுக்க ஆரம்பித்தனர். கானல் நீர்இதனால்,கிராமப்புற பள்ளிகளில்,மாணவர்களின் சேர்க்கை குறையத் தொடங்கியது.அதை தொடர்ந்து,கிராமப்புறங்களில் ஆங்கில வழி கல்வி கேள்விக்குறியானது.

இதுகுறித்து,மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என,கூறிய தமிழக அரசு,அதற்கான புதிய ஆசிரியர்களை நியமனம்,வகுப்பறைகள் போன்ற பணிகளை செய்து தரவில்லை.இதனால்,அரசு பள்ளிகளில்,ஆங்கில வழி கல்வி என்பது,கானல் நீராகவே உள்ளது,என்றார். மேலும்,தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,கிராமப்புற மாணவர்கள்,தாய்மொழிதமிழில் படித்தும்,போதிய பயிற்சியின்மை காரணமாக,ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில்,பாதி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை.இந்நிலையில்,தமிழக அரசின் ஆங்கில வழி கல்வி அறிவிப்பானது,வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல உள்ளது,என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி