ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2015

ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.


தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பான நடவடிக்கைகளை சில துறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மற்ற துறைகளும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதில்கள், எளிதில் புரியும்படி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, சட்டம்-நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில், "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு அளிக்கப்படும் கேள்விகளையும், பதில்களையும், அனைத்துத் துறைகளும் தானாக முன்வந்து வெளியிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி