ஆசிரியர் கவுன்சலிங்கில், பழைய முறையை அமல்படுத்த வேண்டும்' என, மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்ட மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமு தலைமை வகித்தார். தலைமையிட செயலாளர் குமரேசன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் புஷ்பராசு கோரிக்கை குறித்து பேசினார். கூட்டத்தில், அரசு தற்போது வெளியிட்டுள்ள, பொது மாறுதல் கவுன்சலிங் ஆணையின் விதிமுறைகள், அனைத்து நிலை ஆசிரியர்களையும் அதிருப்தி அடைய செய்துள்ளது. ஒரு ஆசிரியர், ஒரு பள்ளியில், மூன்று கல்வி ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே, கவுன்சலிங்கில் பங்கேற்க முடியும் என்ற விதியையும், முதலில் பொது மாறுதல் கவுன்சலிங், பின்னர் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தப்படும் என்ற விதியையும், ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.எனவே, இந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரு ஆசிரியர், ஒரு பள்ளியில், ஒரு ஆண்டு பணிபுரிந்திருந்தாலே போதும் என்ற விதியும், பதவி உயர்வு கவுன்சலிங் நடந்த பின்னர், பொது மாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்ற பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.அவ்வாறு அரசாணை மாற்றப்படாத பட்சத்தில், அனைத்து நிலை ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி, அறவழிப் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி