விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம்,வெள்ளையாம்பட்டு - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2015

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம்,வெள்ளையாம்பட்டு - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம்,வெள்ளையாம்பட்டு - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 242 மாணவமாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 4 பட்டதாரிஆசிரியர்களும், 5 இடைநிலை ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.


இப்பள்ளியில் கடந்த 2014 – 2015 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவமாணவிகள் தேசிய வருவாய் வழி தேர்வான NMMS தேர்வை 12 மாணவர்கள் எழுதினார்கள்.இவர்களில் 11 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இப்பள்ளியில் வரலாற்று சாதனைபடைத்துள்ளார்கள். இம்மாணவ , மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல்பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.500/- வீதம் கல்வி உதவித்தொகை கிடைக்கும் .

இம்மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் திருமதி. சோ.அமுதா அவர்கள்பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தினமும்பள்ளி வேளை நேரத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்து அவர்களைபயிற்சிவித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு.K. முருகன் அவர்களையும், உடன்ஒத்துழைப்பு நல்கிய சக ஆசிரியர்களான திரு.பா.ஜானகிராமன், திருமதி.வ.க.மஞ்சுளா,திருமதி .வே.புவனேஸ்வரி திருமதி.அ.அபிராமி., திரு.ஆ.குளோரிஜெர்மானியூஸ்,திருமதி.ரூ.புஷ்பராணி , செல்வி .பா.வெண்ணிலா ஆகிய அனைவரையும் பள்ளியின்தலைமையாசிரியர் பாராட்டுகளை தெரிவித்தார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி