ஆசிரியர்கள் போராட்டம்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2015

ஆசிரியர்கள் போராட்டம்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு!

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் 1ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர். இதுகுறித்து தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 லட்சம் வரை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும், 6வது ஊதியக்குழு பரிந்துரைகளை திருத்தியமைக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27 ஆசிரியர் சங்க இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'ஜாக்டோ' என்ற அமைப்பு ஆகஸ்ட் 1ம் தேதி சென்னையில் தொடர் முழுக்க போராட்டத்தை அறிவித்துள்ளது.இது தொடர்பாக தி.மு.க. உள்பட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் போராட்டம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களின் ரியாக் ஷன் இதோ.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: அ.தி.மு.க. அரசாங்கமே செயல்படாம முடங்கி கிடக்கு. உங்க போராட்டத்துல வந்து நான் பேசுறேன். நான் வந்து பேசுறதால அரசு உங்க கோரிக்கையை நிறைவேற்றலைன்னு சொன்னா. என்னை நீங்க கோவிச்சுக்க கூடாது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்:

ஆசிரியர் சங்க நிர்வாகிங்க இவ்வளவு பேர்வந்திருக்கீங்க. அதோடு மீடியாவும் நிறைய வந்திருக்கு. தி.மு.க. கிட்ட வந்துட்டதால உங்களுக்கு நெகட்டிவ்வாக போயிடப்போகுது. பார்த்துக்கங்க. ஆனா எங்க ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு.

காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:

அ.தி.மு.க. ஆட்சியில் அரசாங்கமே செயல்படலை. இதுல அந்த அம்மா கல்வித்துறையை மட்டுமா கண்டுக்க போறாங்க. உங்க கோரிக்கைகள் பற்றி எழுதி கொடுத்துட்டு போங்க.

நான் படிச்சு பார்த்துட்டு போராட்டத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அறிக்கை விடுறேன்.ராகுல்காந்தி 23ம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றாரு. அதனால கொஞ்சம் பிசியாகஇருக்கேன். முடிஞ்ச அளவு போராட்டத்துக்கு வர்றேன்.

பா.ம.,க. தலைவர் டாக்டர் ராமதாஸ்:

இந்த அம்மா டாஸ்மாக் மதுபானக்கடையை திறந்து வச்சுக்கிட்டு பள்ளிக்கூட மாணவர்களை கூட மதுவுக்கு அடிமையாக்கிட்டாங்க. இப்படியே போனா தமிழ்நாடு குடிகார நாடாக போயிரும். உங்க கோரிக்கை சம்மந்தமாக ஏற்கனவே வாத்தியாராக இருந்த எங்க ஜி.கே.மணிக்கிட்ட கலந்துக்கிட்டு அறிக்கை விடுறதோடு, கண்டிப்பாக போராட்டத்துக்கு வர்றேன்.கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: உங்க கோரிக்கைகள் நியாயமானதுதான். ஆனா, பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நிறைய சம்பளம் வாங்கிக்கிட்டு ஒழுங்காக வேலை செய்யுறதில்லைன்னு ஒரு எண்ணம்இருக்கு. முதலில் அந்த எண்ணத்தை மாத்துறது மாதிரி உங்க நடவடிக்கைகள் இருக்கணும். பொதுமக்கள் மனசுல இருக்கிறதை புரிஞ்சுக்கிட்டு உங்க கடமையை ஒழுங்காக செய்யுங்க. உங்க போராட்டத்துக்கு எங்க ஆதரவு நிச்சயம் உண்டுன்னு சொல்லி அட்வைஸ் செஞ்சு அனுப்பினாராம்.

இதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.தே.மு.தி.,க. தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு ஜாக்டோ அமைப்பினர் கடிதம் கொடுத்துள்ளார்களாம். கேப்டன் இப்போ ரொம்ப பிசின்னு தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லியிருக்கிறார்களாம்.

43 comments:

  1. First வாங்குர சம்பளத்துக்கு முழுசா வேலைங்க....
    முடியலனா ரிசைன் பண்ணிட்டு போய்ட்டே இரு..
    டெட் பாஸ் பண்ணிட்டு பலபேர் இருக்காங்க
    முடிஞ்சா பணி துறக்கும் போராட்டம் பண்ணுங்களேன் பார்ப்போம்
    போய் ஸ்டூடண்ஸ்ஸ பாருங்க சார்
    தமிழே வாசிக்க தெரியாம இருக்காங்க
    அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிங்க
    பாக்குறது 21 பீரியடு....

    ReplyDelete
    Replies
    1. Respected sir...... have you come and seen that we are working for only 21 periods per day???? For your information we are working for 35 periods and saturdays also we are working. Please hold your tongue. Think n talk. Sry if i said anyrhing wrong and again sry if i hurt u

      Delete
    2. MR.சோழன் உங்களது வேலையே நிரந்தரம் இல்லை என்பதை நினைவில் கொண்டு கமெண்ட்ஸ் செய்யவும் (உச்ச நீதி மன்ற தீர்ப்பு இந்த அரசாங்கத்திற்கு எதிராக வந்தால் உங்கள் நிலை என்னவாகும் )

      Delete
  2. இராஜ இராஜ சோழன் உங்கள் கல்வி மற்றும் அறிவுக்கு காரணம் ஒரு ஆசிரியர் என்பதை மறவாதீர்

    ReplyDelete
  3. ஆசிரியர் இல்லாமல் நானில்லை..
    Teachers are working in private schools just for 5000 Rs. You are getting 40000 to 48000 then what's there to ask for more. Moreover are you working equal to that private school teachers. They are willing to work if govt gives even half of your salary...govt should conduct a tet for already working teachers.that will decide everything ..

    ReplyDelete
    Replies
    1. நெசமாவா, Government சம்பளம் 40000 தராங்களா, எந்த ஊர்லனு சொன்னிங்கனா, அந்த ஊருக்கு வேலைக்கு போவேன்.

      Delete
  4. இவ்ளோ குடுத்தா தான் செஞ்சி குடுப்பேன்னு சொல்ர சில அரசியல்வாதிக்கும் இத நிறைவேற்றினாதான் ஓட்டு போடுவேன்னு சொல்ற உங்களுக்கும் என்ன சார் வித்தியாசம்.
    Public...
    It's time ti think.
    Please reply.
    It's about the life of poor children studying in govt schools
    In which way they are being trained up to face this competitive world
    Children of these teachers are studying in cbse schools
    How do the poor govt school children make their lives... public please think....

    ReplyDelete
    Replies
    1. இங்கே யாரும் அரசியல்வாதிபோல பேரம் பேசவில்லை,
      கடமையைச் செய்கிறோம்
      உரிமையை கேட்கிறோம்
      மேலும் எங்கள் கடமைகளை நாங்கள் சரியாக செய்கிறோம் என்பதை தங்களைப்போன்றோர்களுக்கு நாங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Eanaku ennoda job tha God,soul.... Teacherskum family iruku... Childrens irukanga.... Childrens Kitta Nanga onnum corruption vangala.... Seira velaiku kooli pathalanu solrom...neenga solradhu unmaiya irundha.... Government school students yarum engineering, medical counseling kooda attend panniruka mudiyadhu...

    ReplyDelete
  7. Private schools pathi perusa pesurengale..... Ethana Hills areala private schools iruku..?... Anga irukura students padika yar karanamnu yosinga....

    ReplyDelete
  8. Private schools ethana poor studentsku freeya education tharanganu solrengala..... Private school studentsa vida government school school students English grammaticala pesuven.... Na prove Pannava...

    ReplyDelete
  9. Private schools ethana poor studentsku freeya education tharanganu solrengala..... Private school studentsa vida government school school students English grammaticala pesuven.... Na prove Pannava...

    ReplyDelete
  10. Na padichadhu government school tha sir.... Ippa na government employee... Ennoda lifeku karanam government teachers tha.... Innum ethanayo per irukanga....

    ReplyDelete
  11. Teacherskulla manavearubaadu veandaam

    ReplyDelete
  12. Ippa problem adhu illa sir. Neenga paakura adhe velaya private schools la verum 4000 thukku paakuranga. Indha varudam weitage 70 ki mela. 73 ku mela vangina evlo evlo teachers paper 1 la reject ayirukanga. Avanga unga salary kuditha podhim work panna ready... ippa kalviseithi first post a padinga surplus pattri....en aadhangam umgalukku puriyum...40000 salary nu nan sonnadhu BT assistants ku. Naan job la serndhu 9 months agudhu...naane 30000 vanguren. Nan private schoola paatha velaya madhiriyedhan ingayum paakuren.anga 5000 vanginen. Innumm adhigama ulaipen. Oru naalum oodhiya uyarvukku porada matten..

    ReplyDelete
    Replies
    1. Hello Sir, Nenga entha school la work panringa ,Weekly 21Periods than unga working hours a apa ungaluku,30000 Salary e athigam than Pola , Government Teachers 28 to 30 pEriods class pakanum ,Apdi ilati antha posting Surplus la poidum

      Delete
    2. Hello Mr.ராஜராஜசோழன் நீங்க BT, நாங்க secondary grade உங்க சம்பளம் 30000 னா, எங்க சம்பளம் 16000 எங்க salary problem, clear-ஆனா உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் 2000 மட்டுமே என்ற வயிற்றெரிச்சலில்தான் இவ்வளவு அக்கறையாக comments செய்துள்ளீரா.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  13. OK sir.... வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  14. Neenga support panradhu private school... But job mattum governmentla venum..... Good argument sir

    ReplyDelete
  15. Nan support pandradhu private school teachersku sir.....inimel pani niyamaname kidaiyadhungudhu govt....appa velaikku kaathirupor nilamai yenna....avangalukkum kudumbam irukku valkai irukku....velaya thakka vachikittu polaikira valiya parunga sir....porattam pannadheenga....totala ella paniyidathukkum tet vachi pudhusa nirappa kuda vaipirukku sir..... vaalvom vaala viduvom

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 21 periods மட்டுமே பாடம் எடுக்கற உங்களுக்கு முழு சம்பளம் 35 periodsம் பாடம் எடுக்கற எங்களுக்கு மட்டும் பாதி சம்பளமா, நல்லாயிருக்கே நீதி.

      Delete
  16. Raja raja chozhan sir thanks engaloda kashtathukaga nenga kudukura voice thank u very much

    ReplyDelete
  17. தனியார் பள்ளியில் ஆசிரியருக்கு கற்பித்தல் பணி மட்டுமே, ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பணிச்சுமை கூடிக்கொண்டே செல்கிறது. இதுபற்றி அறியாமலும் ஊதிய விவரம் பற்றி முழுமையாக அறியாமலும் தேவையற்ற கமெண்ட்களை பண்ணவேண்டாம்! விவரம் தெரிந்தவர்கள் மட்டும் கமெண்ட் செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. நான்கு பதிவேடுகளை பராமரிப்பது உங்களுக்கு அவ்ளோ பெரிய கஷ்டமா....

      Delete
    2. நான்தான் கூறினேனே விவரம் தெரிந்தவர்கள் பேசலாம் என்று, தாங்கள் அறிந்தது வெறும் நான்கு பதிவேடுகள் மட்டும்தானா.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. சுமார் 65 வகையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும், இதுகுறித்த விவரங்களை இணையத்தில் எளிதில் பதிவிறக்கிக்கொள்ளலாம், தனியார் பள்ளிக்கு ஓர் அதிகாரி மட்டுமே, ஆனால் அரசு பள்ளிக்கு நிலையே தலைகீழ். கற்பித்தல் மற்றும் பதிவேடு பராமரிப்பு பணி மட்டுமல்ல மேலும் பல்வேறு சுமைகள் உள்ளன.

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Private schools earns more in the name of fees and give less salary to staffs,,,so you have to raise questions to Private school authority not to gvt and no one have the right to under estimate gvt school teacher's talent,,,

    ReplyDelete
  20. according to you private school teachers are working harder than gvt school teachers,,, so they are genius I accept,,,why a genius afraid of TET? Its easy for them to pass,,,

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Sure Ramanujan sir,,, ketka vendiya idathil ketka kudiyavarhal ketal dhan, anaivarukum niyayam kidaikum,, (Pana mudhalaihalin pirithalum kolhayil sikinal China pinam dhan) we r teachers,,, we should be united

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. "Podhum endra maname punn seium marunthu" nu soli kudukara namale "podhadhu. patthhadhunu" porattam panrathula ena niyam irukunu therialaye teacher's

    ReplyDelete
    Replies
    1. அவர்களது உரிமையை அவர்கள் கேட்கிறார்க ள் ..மற்றவர்களுக்கு இதில் கருத்து சொல்ல என்ன உரிமை இருக்கிறது .இடை நிலை ஆசிரியர்களுக்கு இந்த அரசாங்கம் துரோகம் செய்கிறது .அந்த துரோகத்தை அவர்க ள் தட்டி கேட்கிறார்கள் ..பக்கத்துக்கு மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்குகிறார்க ள் இங்கு வழங்க வில்லை அவர்கள் கேட்கிறார்கள் ..இதி நியாயம் உள்ளது ..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி