TET: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2015

TET: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா?

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நவம்பருக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தக்குமார் கூறியதாவது:

'டெட்' தேர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயம் என்றால் அவர்கள் 'டெட்' தேர்வை முடித்து விட்டு அரசு பள்ளிகளுக்கு சென்று விடுவர். இதனால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். தனியார் பள்ளிகள் மீண்டும்புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கான 97 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும்; விரைவில் அங்கீகாரம் தர வேண்டும் ஆகியகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பள்ளி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

10 comments:

  1. இந்த மானங்கெட்ட நந்த குமார்க்கு ஏன் இந்த ஈன புத்தி, டேய் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவா்கள் எல்லாருமே அரசு பள்ளியில் சோ்ந்து விட்டார்களா? இல்ல இதற்கு மேல் சமார் பத்து பதினைந்து பேர் தான் தேர்ச்சி பெற போகிறார்களா?
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை இல்லையென்றாலும் ஓரளவு நல்ல சம்பளத்திளாவது வேலை செய்வார்கள். அது ஏன் இந்த பணக்கார முதலைகளின் தலைவனுக்கு தெரிய வில்லை. இவர்கள் சம்பளத்திற்கு பயந்து தான் இப்படி நாடகமாடுகிறார்கள். எப்படியும் இவார்கள் அரசுக்கும், நீதித் துறைக்கும் எலும்பு துண்டு போட போவது உறுதியாகிவிட்டது.
    அவா்களுக்கு எலும்பு துண்டும், கடினப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களின் தலையில் வெறும் துண்டும் போடப் போவது உறுதியாகிவிட்டது.

    ReplyDelete
  2. பி.எட் பட்டதாரி ஆசிரிய நண்பர்களுக்கு,
    இன்று நாம் தகுதி தோ்வில் தேர்ச்சி பெறவில்லையென்றாலும , நாளை தோ்ச்சி பெறுவோம். ஆனால் அவர்கள் எண்ணம் நிறைவேறினால் வாழ்வின் கடைசி வரை நம் வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வெறும் 3000 க்கும் 4000 க்கும் இரத்தம் சிந்த வேண்டியிருக்கும்.தனியார் பள்ளியிலும் தகுதி தேர்வை அமல் படுத்தினால் ஓரளவு வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
    தலையை பாதுகாக்க தலை கவசம் அவசியம் என்பதில் அதில் அரசுத் துறையை சார்ந்த நண்பர்கள் தான் போட வேண்டும் தனியார் துறையை சார்ந்த நண்பர்கள் போட வேண்டாம் என்று எந்த சட்டமும் சொல்வதில்லை. அப்படியிருக்க தரமான கல்வியை போதிக்க தகுதிப் பெற்ற ஆசிரியாகள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே தேவை என்றும் தனியார் பள்ளிகளுக்கு அவசியமில்லை என்பது எவ்வளவு கண்டிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  3. Thaniyaar palligal kuzhsmbiya kuttaiyil mean pidikka paarkiradhu..

    ReplyDelete
  4. ipdiyavadhu vala vidungaya!!! TET pass elathukum dhan porundhum,,, Private schools are always coaching not teaching,,, so they need only ringmaster not a teacher,,,You must answer the question of Eligible candidates

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். நான்ஸி.....

      Delete
    2. மிகச் சரியாகச் சொன்னீர்கள். நான்ஸி.....

      Delete
    3. மிகச் சரியாகச் சொன்னீர்கள். நான்ஸி.....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி