கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் மத்திய அரசின், பல்கலைகழக மானியக்குழு நிதியுதவி பெறும் நிலையில், ஒப்பந்தத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் ஜூன் 30ம் தேதியுடன் (எம்ஓயு) புதுப்பிக்க வேண்டும்.ஆனால் பல்கலைகழக அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காதால்,
பல்கலைகழக பேராசிரியையைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டன. நேற்று பல்கலைகழகம் திறக்கப்பட்டது.ஆனால், ஒப்பந்தம் புதுப்பிப்பது தொடர்பாக வேந்தர் சரியான பதில் அளிக்காததால்,காலை முதல் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியையைகள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இரவு விடிய, விடிய பல்கலைகழகத்தின் ஒன்றாம் எண் நுழைவு வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை நிர்வாகத்தினர் கேட்டை இழுத்து மூட முயன்ற போது, அதை தடுத்து கோஷம் எழுப்பினர். கோவை வடக்கு தாசில்தார் ரவி, பல்கலைகழகத்திற்கு வந்து பேச்சுவார்தை நடத்தினார். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இரவு 12:00 மணிக்கு பிறகும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், பல்கலை கழக நிர்வாகம் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவித்தது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி