'மேட்ரிமோனி'யிலும் ஆதார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2015

'மேட்ரிமோனி'யிலும் ஆதார்

மோசடிகள் நடக்காமல் தடுக்க, திருமண இணையதளங்களில் வரன் தேடி விளம்பரம் செய்வோர், ஆதார் எண்ணை தரும் வகையில், நடைமுறைகளில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருமண விளம்பரங்கள் தர எண்ணற்ற இணையதளங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. அவைகள்,
அதிக கட்டணம் பெற்று, வரன்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டாலும், மோசடி விளம்பரங்களை தடுக்க வகை செய்யவில்லை.இதனால், பல ஆண்கள், போலி திருமண தகவல்களை வெளியிட்டு, தம்மை ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இணையதளங்களில் திருமண விளம்பரங்கள் தருவோர், ஆதார் எண் அளிப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 'டெய்டி' எனப்படும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, திருமணம் தொடர்பான சேவைகளை அளிக்கும் இணையதளங்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர், கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

இணையதளங்களில், வரன் தேடி விளம்பரம் செய்யும் பெண்கள், ஏமாறாமல் தடுக்கவும், பொய் தகவல்களுடன் விளம்பரங்கள் தருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தக்க தொழில் நுட்பத்தை உருவாக்குவது குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. திருமண விளம்பரங்கள் தருவோர், தமது ஆதார் எண் விவரங்களை அளிப்பதை கட்டாயமாக்குவது, 'டெய்டி'யின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், திருமண விளம்பரங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியாது என, இணையதளங்கள் கூறுகின்றன. இதுகுறித்து, 'ஜீவன்சாத்தி' திருமண இணையதளத்தின் தலைவர் ரோகன் மாத்துார், ஆதார் எண் தர விரும்பாத வாடிக்கையாளரை கட்டாயப்படுத்த முடியாது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி