விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 2015--16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம்துவங்கியது.மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.பார்ம்., பி.எஸ்.சி., நர்சிங், ரேடியோலாஜிஇமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி, அரசு மருத்துவக் கல்லுாரிகள் அனைத்திலும் நேற்று துவங்கியது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், நேற்று காலை 10.15 மணிக்கு, டீன் டாக்டர் சிவக்குமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மருத்துவம்சார்ந்த படிப்புகளில் சேர வரும் 17ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக, 2 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், வரும் 18ம் தேதி மாலை 5 :00 மணிக்குள், குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் தேவைப்படுவோர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 350 ரூபாய் மதிப்புக்கு, செக்ரட்டரி- செலக்ஷன் கமிட்டி, கீழ்பாக்கம் என்ற முகவரியில் மாற்றத்தக்க வகையில், டிடி அளித்து, விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, டீன் சிவக்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி