தமிழகத்தில் பள்ளிக் கல்வித்தரம்: விஜயகாந்த் கவலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2015

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்தரம்: விஜயகாந்த் கவலை

தமிழகப்பள்ளிகளில் கல்வியின்தரம், தேசிய கல்வித்தரத்திற்கு இணையாக இல்லை. வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''தமிழகத்தில் தனியார்பள்ளிகளுக்கு இணையாக, அரசுபள்ளி மாணவ, மாணவியர் கல்வி கற்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில், சமச்சீர் கல்விமுறையை கொண்டுவந்தபோது அனைவரும் வரவேற்றனர்.

ஆனால், தற்போது பள்ளிக்கல்வித்துறையின் நடைமுறைகளை காணும் போது, கல்வியின் தரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதென்பது தெரிகிறது.10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு மளமளவென அதிகரித்து, இந்த 2015ஆம் ஆண்டு 92.9 மற்றும் 90.6 சதவிகிதம் தேர்ச்சி என சொல்லப்பட்டுள்ளது. அப்படி தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி கற்கச் செல்லும் விகிதாச்சாரம் குறைந்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளிலிருந்து மிக மிக குறைவான அளவே உயர் கல்விக்கு சென்றுள்ளனர்.ஐஏஎஸ் தேர்வில் நாடு முழுவதும் 1236 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும்,தமிழ்நாட்டில் மட்டும் 118 பேர் தேர்ச்சியடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அதே சமயத்தில் இவர்கள் அனைவருமே கடந்த 10 வருடங்களுக்கு முன்பே பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த நான்குவருடமாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியாளர், பட்டயகணக்காளர் (CA) படிப்பிற்கு அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வில்,தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து வருகிறது.சமீபத்தில் நடந்த ஐஐடி நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வெழுதியும் 33 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாகும். இதே நிலைதான் மருத்துவம் மற்றும் பட்டயகணக்காளர் (CA) படிப்பிற்கும் உள்ளது.கடந்த காலங்களில் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்தான் இதுபோன்ற தேர்வுகளில் அதிகளவு தேர்ச்சி பெற்றதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. ஆனால் நம்மை விட பின்தங்கியுள்ள மாநிலங்களை சார்ந்தவர்கள் தற்போது அதிகளவில் தேர்வாகும்போது, மிகுந்த அறிவுத்திறனும், ஆற்றலும், உழைப்புமுள்ள தமிழக மாணவ, மாணவியரால் ஏன் தேர்ச்சி பெற முடியவில்லை?

இதற்கு முழுமுதற் காரணம் தமிழகப்பள்ளிகளில் கல்வியின்தரம், தேசிய கல்வித்தரத்திற்கு இணையாக இல்லை. குறிப்பாக 9, 10, +1, +2 ஆகிய வகுப்பு பாடத்திட்டங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை, அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும்போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிடும் என்றும், தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாதுஎன கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.

எனவே. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் +2 வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் என புள்ளிவிபரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களும். சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

14 comments:

  1. சரியாக தான் சொல்லி இருக்கிறார். முற்றிலும் உண்மை. குடி போதையில் சொல்லி இருக்கிறார் என்று ஆளும் கட்சி விமர்சனம் செய்யும்.

    ReplyDelete
  2. Those who are ready to discuss study for English Pg Trb? Conference maketh a _________ man?

    ReplyDelete
    Replies
    1. Reading maketh a full man; conference a ready man; and writing an exact man.

      Lord Bacon

      Delete
    2. The year 1597 marked Bacon's first publication, a collection of essays about politics. The collection was later expanded and republished in 1612 and 1625. இந்த வருடங்கள் மிகவும் முக்கியம். இது ஏற்கனவே PG TRB ல் கேட்கப்பட்ட ஒன்று. Imman John அவர்களுக்கு நன்றி. ஏனெனில் நான் Trichy St.Joseph's கல்லூரியில் படித்ததை வெளிக்கொண்டு வந்தமைக்கு.......இதை எனக்கு போதித்த பேராசிரியர் திரு வி ரிச்சர்ட் அவர்கள்......

      Delete
    3. Welcome sir thanks for ur valuable info

      Delete
  3. Admin sir today 2011cv mudithavarkalin cause chennai high court la list vanthatha antha cause n nilai enna

    ReplyDelete
  4. I am wait u r valuable comment

    ReplyDelete
  5. Anybody know 2010 cv case patri pathividavum please.

    ReplyDelete
  6. இது போன்று பயிற்சி பெட்டகங்களைத் தந்து அவர்களைத் தேர்ச்சியடையச்செய்வது,நல்லதல்ல.வினாக்கள் இதிலிருந்து மட்டுமே கேட்கப்படுவதால் ,மாணவர்கள்,இதனை மட்டுமே மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். உயர்கல்வி நுழைவிதேர்வில் வெற்றிபெறமுடியாமல் தவிக்கின்றார்கள். உயர் அதிகரிகளோ தேர்ச்சிவிகிதம் அதிகரித்துவிட்டடாகப் புள்ளி விவரங்களைக் காட்டி ஏமாற்றுகிரார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி