பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல வலைத்தள அடிப்படையிலான மொபைல் செயலிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொலைத் தொடர்புத் துறை நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மொபைல் போன்களில் இந்த சமூக வலைதள செயிலிகள் வாயிலாக பரிமாறப்படும் தகவல்கள் விக்கிலீக்ஸ் போன்று திருடப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான வகையில் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது.  எனவே மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இணைய சமவாய்ப்பு, தேசிய பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம், பொது அமைதி உள்ளிட்டவற்றை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிபுயர் குழு கூறியுள்ளது.
இதற்கு சட்ட வடிவம் கொடுக்கும் வரை இணையதள சேவையை அளிக்கும் நிறுவனங்களுக்கான உரிமத்தில் இந்தஅம்சத்தை சேர்க்க வேண்டும் என நிபுணர்க் குழு வலியுறுத்தியுள்ளது. இணையசம வாய்ப்பு பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களை கண்காணிக்க வேண்டும் என கூறியிருப்பது இணைய பயன்பாட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வாட்ஸ் அப், முகநூல் போன்ற தளங்களில் வெளியாகும் கருத்துக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதுடன், சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரிக்கும் என கருதி இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி