மாணவர்கள் அதிகம் விரும்பும் பிரிவாக மாறிய இசிஇ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2015

மாணவர்கள் அதிகம் விரும்பும் பிரிவாக மாறிய இசிஇ

பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் முடிவுற்ற நிலையில், பல்கலைக்கழகத் துறைகள் உள்பட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.மேலும் கடந்த 4 ஆண்டுகளாக பி.இ. மெக்கானிக்கல் பிரிவின் மீது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்த நிலையில்,
நிகழாண்டில் இசிஇ பிரிவே அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவாக மீண்டும் மாறியுள்ளது.பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவருகிறது. நிகழாண்டுக்கான சேர்க்கை ஜூன் 28-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 28 வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதுவரை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 37,504 பேரில் 29,344 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.8,010 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். 150 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

முன்னணிக் கல்லூரிகளில் இடமில்லை:

பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள்முடிவடைந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்ஐடி ஆகியவற்றில் எல்லா துறைகளிலும் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.இதுபோல ஈரோடு சாலைப் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரி (ஐஆர்டிடி), கோவை அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி), கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), மதுரை தியாராஜர் பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட அரசுபொறியியல் கல்லூரிகளிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் உள்ள முன்னணி சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.அதே நேரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்படாமல் அப்படியே உள்ளன. இனிதான் இந்தக் கல்லூரி இடங்களை மாணவர்கள் தேர்வு செய்வர் என்றாலும், கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி