ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2015

ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி

எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளைஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது.
இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதிலும் சிலமுரண்பாடுகள் இருப்பதாக கூறியதை அடுத்து, 3 நபர் குழு அமைக்கப்பட்டு 89 அரசாணைகள் வெளியிடப்பட்டன.மீண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்காக 7 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகத்திலும் 8 வது ஊதிய மாற்றம் செய்யப்படஉள்ளது. அதுவரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தவேண்டாம் என, நிதித்துறை கேட்டு கொண்டுள்ளது. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசின் அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஆக., 22 ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி