பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள்:மாநில செயலாளர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2015

பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள்:மாநில செயலாளர் பேட்டி

“இந்திய அளவில் செப்டம்பரில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கும்,” என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இசக்கியப்பன் தெரிவித்தார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது:


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த ஆசிரியரை மட்டுமே அழைக்கின்றனர்.அவற்றை மாற்றி, ஒரு ஆண்டுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களையும் அழைக்க வேண்டும். இடமாறுதலில் ஆசிரியர், பள்ளி, மாணவர், நிர்வாக நலன் கருதி மாற்றம் எனக்குறிப்பிடுவதை நீக்க வேண்டும். இவ்வாறு தெரிவிப்பதே கலந்தாய்வில் ஊழலுக்கு வழிவகுக்கும்.

ஒளிவுமறைவின்றி 'ஆன்-லைனில்' கலந்தாய்வு நடத்தி மாறுதல் உத்தரவை ஆசிரியருக்கு வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவுப்படி தேர்வு, சிறப்புநிலை அந்தஸ்து வேண்டும்,உயர், மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலைஆசிரியரை, பட்டதாரி ஆசிரியர் என தரம் உயர்த்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் சம்பள விகிதம் ரூ.5,200 + 2,800 என்றிருப்பதை மாற்றி ரூ.9,300+4,200 வழங்க வேண்டும்.இவைகளை வலியுறுத்தி ஜூலை 23ல் மாநில அளவில் அந்தந்த மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

வேலை நிறுத்தம்:

7வது சம்பளக்குழு பரிந்துரைபடி சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் 1:20 என மாற்ற வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கைகளை தனியார் துறையிலும் உருவாக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து செப்டம்பர் 2ல் அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும். 15 முதல் 20 லட்சம் ஆசிரியர், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி