ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்தை ஓராண்டாகக் குறைக்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2015

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்தை ஓராண்டாகக் குறைக்க வலியுறுத்தல்

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.இந்தக் கோரிக்கை தொடர்பாக
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதாவிடமும் அவர்கள் கோரிக்கைமனுவை வழங்கியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வே.நடராசன், பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கியுள்ள மனு விவரம்:-

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் அதே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை ஓராண்டாகக் குறைக்க வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் வட்டாரவள மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைக்கப்பட்டதால், அங்கு பணியாற்றிய 380 பேர் வெளி மாவட்டங்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக நிர்வாக மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

6 comments:

  1. mutual kalasapakkam thiruvannamalai dist to dindigul nearest dist post soical bt plz contact 9943933930

    ReplyDelete
  2. Sep 2014 appointment P.G TEACHERS?????

    ReplyDelete
  3. Nirvaga maruthal. Three year condition all for money only. Panimaruthal illai ithu pana maruthal pa next year. All will change

    ReplyDelete
  4. Yethu nadanthalum vayakatti summa irukura ore govt servant teachers than. Sangam serthu sathipathillai yarum yellam panam vasul seiyathan all sangamum mumaram katukirathu

    ReplyDelete
  5. Sariya sonneenga sir.vazhakkama unit to unit transfer entru pothu maaruthel illamel panamaaruthalil thaan nadakkirathu.unit to unit transfer pontru ella maaruthelgalaiyum maraimugamaga nadatthe vendiyethuthanne.

    ReplyDelete
  6. Friends! Is there any rules for mutual transfer?. Im English B.T. 2014 appointed....seeking for mutual transfer...pls reply...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி