PG Teachers REGULARISATION ORDER - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2015

PG Teachers REGULARISATION ORDER

முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்.

Click here REGULARISATION ORDER...
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி–முதுகலையாசிரியர்கள்நேரடிநியமனம்- 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர்தேர்வுவாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள்–பணிநியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள்–முறையானநியமனமாக  முறைப்படுத்தி ஆணை வழங்குதல் | அரசாணை(நிலை) எண்.135, பள்ளிக்கல்வித் (வ.செ.2)துறை, நாள். 03.06.2010-ன்படி நேரடி நியமனம் செய்ய 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இவ்வலுவலக செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நேரடி பணி நியமனங்கள் அனைத்தும் அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதோடு, இவ்வாணை வழக்கு நீதிப்பேராணை மனு எண்.13884/2008-ல் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பாணைக்குட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயல்முறைகளின் நகல்களை தொடர்புடையப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைப்பதோடு, அவர்களது பணிப்பதிவேடுகளில் பதிவுகளை செய்ய உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி