குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2015

குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ் டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 1 தேர்வு, நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:குரூப் 1தேர்வில், 74 காலியிடங்களுக்கு, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி விரைவில் துவங்கும்.


குரூப் 2 பதவிக்கான, 1,136 காலியிடங்களுக்கு, ஜூலை, 15ம் தேதி முதல் ஆகஸ்ட், 8ம் தேதி வரைநேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான இணைந்த மதிப்பெண் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தகுதி பெற்ற, 2,265 பேருக்கு வரும், 24ம் தேதி முதல் செப்டம்பர், 1ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. தகுதி பெற்றோருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி