1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2015

1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம்தேதி முதல் நடந்து வருகிறது.


தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376 பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 105 பட்டதாரி ஆசிரியர், 108 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வுபெற்றுள்ளனர். இதேபோல், 145 பட்டதாரி ஆசிரியர், 426 இடைநிலை ஆசிரியர்,தொடக்கப் பள்ளிகளின், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக, தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.பணி நிரவலில் குளறுபடி: தொடக்கக் கல்வியில் மாணவர் குறைவாக இருக்கும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றும் கலந்தாய்வில், பல குளறுபடிகள் நடந்துள்ளன.

இந்த பணி நிரவலில், பல பள்ளிகள் போலி மாணவர் எண்ணிக்கையைக் காட்டி, இடமாறுதலை தவிர்த்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்னையால், கோவை மாவட்டம், சூலுார் வட்டத்தில் நடந்த கலந்தாய்வு, சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர் கூறும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உண்மையில் உள்ளதா என, அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதன் பிறகே, ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

3 comments:

  1. Mutual transfer from paramakudi toTirupur BT Maths DSE if anyone is interested contact me 9942364576

    ReplyDelete
  2. Mutual transfer from paramakudi toTirupur BT Maths DSE if anyone is interested contact me 9942364576

    ReplyDelete
  3. I am Jayanthi working as BT social,in Kallar department in Daindugal district.I need Mutual Transfer to Vellore district.Interested person can contact 9487160069

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி