இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்குச் சென்று ஆகஸ்ட் 17 முதல் 26 வரை இணைய வழி மூலமாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடித் தனித் தேர்வர்கள், பிற பாடத்திட்ட தனித் தேர்வர்களுக்கு சமச்சீர்பாடத்திட்டத்தின் கீழ் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. எனவே, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்போது எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகளிலும், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி