‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை: 17-ம் தேதி முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2015

‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை: 17-ம் தேதி முதல் அமல்

‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் புதிய முறை வரும் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பால முருகன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் டுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக் கம் போல் ‘ஆன் லைன்’ மூலம் நேர்காணலுக்கு அனுமதி பெற்று விட்டு பின்னர் வளசரவாக்கம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஏதாவது ஒரு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று நேர்காணலில் பங்கேற்று வந்தனர்.


ஆனால், ‘தட்கல்’ முறையில் விண் ணப்பிப்பவர்களின் ஆவணங் களை மிகவும் கவனமாகபரிசீலிக்க வேண்டியுள்ளதால் அவர்களுக் கான நேர்காணல் சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இனி நடைபெறும்.இப்புதிய நடைமுறை வரும் 17-ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி