இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நடைமுறையானது, அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (ஏஐபிஈஏ) பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:


அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய நடைமுறை தொடர்பான அறிவிக்கை, விரைவில் வெளியாகும்.இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைவதுடன், அவர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்றார் வெங்கடாசலம்.தற்போது, பொதுத் துறை, தனியார் துறை வங்கிகள் சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி