கல்விக் கடனுக்கான மானியத் தொகை ரூ.392 கோடியை வங்கிகளுக்கு வழங்க மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

கல்விக் கடனுக்கான மானியத் தொகை ரூ.392 கோடியை வங்கிகளுக்கு வழங்க மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல்

தவணை விடுப்பு காலத்தில் கல்விக் கடனுக்காக மத்திய அரசு, வங்கிகளுக்குச் செலுத்தாமல் வைத்திருந்த சுமார் ரூ.392 கோடியை வழங்க ஒப்புதல் தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 01.04.2009 முதல், மாணவர்கள் படிக்கும் காலத்திலும் படிப்பு முடிந்து ஓராண்டு தவணை விடுப்பு காலத்திலும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்தி வருகிறது.


ஆனா லும் பெரும்பாலான வங்கிகள் மாணவர்களிடமும் வட்டி வசூலிக் கின்றன. மத்திய அரசு, வட்டி மானியத் தொகையை முறையாக வழங்காததாலேயே மாணவர் களிடம் வட்டியை வசூலிப்பதாக வங்கிகள் தரப்பில் சொல்லப்படு கிறது.இது தொடர்பாக மத்திய அர சுக்கு ஏராளமான புகார்கள் குவிந் தன. நீதிமன்றங்களிலும் வழக்கு கள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.


இந்த நிலையில், கல்விக் கடன் குளறுபடிகளை சீர்செய் வதற்காக நாடு முழுவதும் விரிவான சர்வே ஒன்றை நடத்தியது மத்திய அரசு. அதன் அடிப்படையில் கல்விக் கடன் திட்டத்தை முறைப் படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.முதல் கட்டமாக, வங்கிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் ரூ.392 கோடியை உடனடியாக வங்கிகளுக்கு வழங்க நேற்று ஒப்புதல் வழங்கி இருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் எஸ்.ஷங்கர்.இதன்படி, 01.04.2009 முதல் 31.03.2014 வரை தலித் மாணவர் களின் கடனுக்கான வட்டி மானி யத்துக்காக ரூ.35 கோடியையும் இதே காலகட்டத்தில் கடன்பெற்ற பழங்குடியின மாணவர்களின் கடனுக்கான வட்டி மானியத்துக்காக ரூ.15 கோடியையும், பிற மாணவர் களின் வட்டி மானியத்துக்காக ரூ.222 கோடியே 5 லட்சத்து 71 ஆயிரத்து 859 ரூபாயையும் உடனடியாக விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதே போல், 01.04.14 முதல் 31.03.15 வரை புதிதாக வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டி மானியத் தையும் உடனடியாக வங்கிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. இதன்படி, தலித் மாணவர் களுக்காக ரூ.100 கோடியும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.20 கோடியும் கல்விக் கடன் மானியமாக வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில் கடன்பெற்ற பிற சாதியினருக்கான வட்டி மானி யத்தை அளிப்பது குறித்து அந்த உத்தரவில் தகவல் எதுவும் இல்லை.மத்திய அரசால் விடுவிக்கப்படும் வட்டி மானியத் தொகையானது கல்விக் கடனுக்கான முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். மற்ற வங்கிகள் தங்களுக்கான மானியத் தொகையை கனரா வங்கி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களும் வங்கிகளும் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ளும்படியும் இந்திய வங்கிகள் சங்கம் இதுகுறித்து பொதுமக்கள்மத்தியில் விளம் பரப்படுத்தும்படியும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


அரசின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய வங்கியாளர்கள், ‘‘ஏற்கெனவே சுமார் ரூ.5,000 கோடி ரூபாயை மத்திய அரசு வட்டி மானியமாக வழங்கி இருக்கிறது.இந்த நிலையில் தற்போது விடுவிக்கப்படும் ரூ.392 கோடி மூலம் கல்விக் கடன் பிரச்சினையில் உள்ள குளறுபடிகள் பெருமளவு சரிசெய்யப்படும்’’ என்கிறார்கள்.மத்திய அரசால் விடுவிக்கப்படும் வட்டி மானியத் தொகையானது கல்விக் கடனுக்கான முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி