23ல் சிவில் சர்வீசஸ் தேர்வு - 9.5 லட்சம் பேர் பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

23ல் சிவில் சர்வீசஸ் தேர்வு - 9.5 லட்சம் பேர் பதிவு

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கான, 1,129 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வரும், 23ம் தேதி நடக்கிறது. இதில், 9.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு, நாடு முழுவதும், 71 நகரங்களில் நடக்கிறது.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலுாரில் நடக்கிறது.


புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. காலையில், இரண்டு மணிநேரம், முதல் தாள்; பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். இரண்டாம் தாளில், கட்டாயம், 33 சதவீத மதிப்பெண் எடுத்தால்மட்டுமே மதிப்பெண் அடிப்படையில் மெயின் தேர்வு எழுத முடியும்.இரண்டு தாள்களிலும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம்பெறும்.


வினாத்தாள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.இந்த தேர்வில், தவறான விடைக்கு, 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு. அதாவது, மூன்று தவறான விடைக்கு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அல்லது ஒரு தவறான விடைக்கு, 0.33 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு அறைக்குள் விடைத்தாள்வைப்பதற்கான அட்டை மற்றும் பேனா தவிர, வேறு எந்த பொருளையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி