பரபரப்பான சூழலில் ஆக.24-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2015

பரபரப்பான சூழலில் ஆக.24-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி (ஆகஸ்ட் 24)தொடங்கும் என சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,


"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் திங்கள் 24-ஆம் நாள் திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப் பேரவை கடைசியாக பட்ஜெட் கூட்டத் தொடருக்காக கடந்த மார்ச் 25-ம்தேதி கூடியது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.


ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் உடனடியாக சட்டப் பேரவை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவ்வாறு கூட்டப்படவில்லை. இந்நிலையில், வரும் 24-ம் தேதி (ஆகஸ்ட் 24) தமிழக சட்டப் பேரவை கூடும் என சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரபரப்பான நிலையில், சட்டப்பேரவையில் மதுவிலக்கு பிரச்சினை எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 comments:

  1. தேர்வு அறிவிப்புகள் பற்றி விவாதிக்கப்படுமா ?????

    ReplyDelete
  2. Teachers posting Patri sollapaduma ?friends.

    ReplyDelete
  3. நிச்சயமாக வரும்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. 3000 ஆசிரியர்கள் அதிகம் என்பது JJ- 2013 TNTET ல் செய்த பெரும் தவறாக இருக்குமோ?????

    ReplyDelete
  6. தகுதி தேர்வு நடக்கும் ஆனால் ஆசிரியர் நியமனம் மிக குறைந்தளவே இருக்கும்.

    ReplyDelete
  7. எதிா்பாா்த்து எதிா்பாா்த்து ஏமாற்றமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி