காலியாக உள்ள 2,500 அரசு பணியிடங்கள் இன்னும் ஓரிரு மாதத்தில் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2015

காலியாக உள்ள 2,500 அரசு பணியிடங்கள் இன்னும் ஓரிரு மாதத்தில் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் காலியாக உள்ள 1,100காவலர் பணியிடங்கள், 500ஆசிரியர்கள், 288 மின்துறை பணியாளர்கள் என 2,500அரசு பணியிடங்கள் இன்னும் ஓரிரு மாதத்தில் நிரப்பப்படும் என மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.


பாண்டிச்சேரி சேம்பர் ஆப் இன்டஸ்ட்ரீஸ் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வில் முதல் 3இடங்களை பிடித்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கண்காணிப்பு கேமிரா இயக்கி வைப்பதற்கான விழா மேட்டுப்பாளையத்தில் நடந்தது. பாண்டிச்சேரி சேம்பர் ஆப் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் கனகசபாபதி தலைமை வரவேற்று பேசினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சாதனைபடைத்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள 8 கண்காணிப்பு கேமிராக்களின் இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.அப்போது முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:–


புதுவை அரசு மாணவ, மாணவிகளுக்கு நல்ல கல்வியை அளித்து வருகிறது. புதுவை அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு உள்ளன. இங்கு திறமையான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளோம். புதுவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற பயிற்சி அளித்து வருகிறோம்.இதில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 பேராவது வெற்றிபெற வேண்டும். புதுச்சேரியை சேர்ந்தவர்களும் நிர்வாக பணியில் அமரவேண்டும். புதுவையின் சுற்றுப்புற சூழலை தொழிற்சாலைகள் பாதுகாக்கவேண்டும். எனவேதான் எங்கள் ஆட்சியில் சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைக்கு அனுமதி தருவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்து செயல்படுகிறோம்.எங்கள் ஆட்சி வந்த பின் 5ஆயிரம் அரசுப்பணியிடங்களை நிரப்பியுள்ளோம். இந்த இடங்கள் அனைத்தும் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட்டன. இதில் ஏதாவது குற்றச்சாட்டு கூறமுடியுமா? விரைவில் 1,100காவலர் பணியிடங்கள், 500ஆசிரியர்கள், 288மின்துறை பணியாளர்கள் என 2,500அரசு பணியிடங்களைநிரப்ப உள்ளோம்.இந்த பணியிடங்கள் இன்னும் ஓரிரு மாதத்தில் நிரப்பப்படும்.


மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அறிவித்துள்ளோம். அந்த இலவச மடிக்கணினி வருகிற 21–ந்தேதி வழங்கப்படும். அதேபோல் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் இந்த மாத இறுதியில் வழங்கப்படும். என்று கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி