பள்ளிக்கல்வி : புதிய கல்வி கொள்கை: இன்று கருத்து கேட்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2015

பள்ளிக்கல்வி : புதிய கல்வி கொள்கை: இன்று கருத்து கேட்பு

பள்ளி கல்வியை, தற்காலத்துக்கு ஏற்ப மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.அறிக்கை தொடர்பாக, மாநிலங்களில் நேரடியாக, மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டங் களையும் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அதனால், தமிழகத்தில், மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் தேசியகல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், தென் மண்டல அமைப்புடன் இணைந்து கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்துகிறது.கடந்த, 6ம் தேதி மதுரையிலும், 8ம் தேதி கோவையிலும் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. இறுதிக் கட்டமாக, சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம்,தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள, கார்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.பொதுமக்கள் சார்பில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பெற்றோர் பங்கேற்று கருத்து கூறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி