தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2015

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 19 பேர் பங்கேற்கவில்லை.


இதையடுத்து 431 பேர்மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.அடுத்ததாக, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வும், சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.பள்ளிக் கல்வி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி