மன அழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 ஐ.ஐ.டி, என்.ஐ.டி மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

மன அழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 ஐ.ஐ.டி, என்.ஐ.டி மாணவர்கள்

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் கடந்த 3 ஆண்டுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வி கற்பதில் சிரமம் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4,400 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதிமொழி அளித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,கடந்த 2012-13 முதல் 2014-15ம் கல்வியாண்டு வரை, நாட்டில் உள்ள16 ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டி நிறுவனத்திலிருந்து 2,352 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.மேலும் அவர், வேறு கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கு மாறுதல், தனிப்பட்ட காரணங்கள், மருத்துவ காரணங்கள், உயர்நிலை கல்வியில் போது பணி கிடைத்தது மற்றும் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அழுத்தம் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குஉதவ செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதில் சிரமப்படும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.இந்தியாவில் தற்போது, 15 ஐ.ஐ.டி நிறுவனங்களும், 30 என்.ஐ.டி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.கடந்த 2014 -15 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி நிறுவனங்களிடமிருந்து 757 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2013-14 காலகட்டத்தில் 697 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.. 2012-13ல் 606 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

இதில் ரூர்க்கி ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து இருந்து 228 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து 209 பேரும், டில்லி ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து 169 பேரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். சென்னை ஐஐடி நிறுவனத்திலிருந்து 8 மாணவர்கள் மட்டும் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.கடந்த 2014-15 ஆண் ஆண்டில் 717 மாணவர்களும். 2013-14 ஆம் ஆண்டில் 785 மாணவர்களும், 2012-13 ஆம் ஆண்டில் 850 மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி