வாகன விபத்தை தடுக்க புதிய தொழில்நுட்பம்: 8 ம் வகுப்பு சிவகங்கை மாணவி உருவாக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

வாகன விபத்தை தடுக்க புதிய தொழில்நுட்பம்: 8 ம் வகுப்பு சிவகங்கை மாணவி உருவாக்கம்

வாகன வேகத்தால் விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த மின்காந்த சக்தி மூலம் 'பிரேக்' பிடிக்கும் தொழில்நுட்பத்தை சிவகங்கை மாணவி எஸ்.லக் ஷனா உருவாக்கியுள்ளார்.


சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.லக் ஷனா. இவர் தனது முயற்சியால் அதிகவேகமாக செல்லும் வாகனத்தை மின்காந்த சக்தி மூலம் பிரேக் பிடித்து நிறுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.மாணவி எஸ்.லக் ஷனா கூறும்போது:


நாட்டில் வாகன விபத்துகளால் உயிர்பலி அதிகரிக்கிறது. பிரேக் பிடிக்கும் போது ஏற்படும் உராய்வு மூலம் வாகனம் நிற்ககாலதாமதம் ஏற்படும். திடீர் விபத்தை தவிர்க்க இந்த பிரேக்கை காலில் அழுத்த முடியாமல், ஓட்டுனர் பதட்டம் அடைவர்.இதை தவிர்த்து மின்காந்த சக்தியால் இயங்கும் 'பவர் பிரேக்'ஐ உருவாக்கியுள்ளேன். வாகன 'ஸ்டியரிங்கில்' இதற்கான சுவிட்ச் பொருத்தப்படும். வாகனம் செல்லும் போது 'பிரேக்' போட நினைத்தால் ஸ்டியரிங்கில் உள்ள 'சுவிட்ச்சை' அழுத்தினால், மின்காந்த சக்தி மூலம் மின்சாரம் டயர் பகுதி இரும்பில் பட்டு காந்த சக்தியாக மாறி, பிரேக் பிடிக்கும். கால் இழந்தவர்கள் எளிதாக இந்த வாகனத்தை ஓட்டலாம்.


விபத்து நேரிடும் போது பதட்டத்தில் டிரைவரின் கால்களை விட கை எளிதில் செயல்படும் என்பதால், வாகன 'ஸ்டியரிங்கில்' சுவிட்ச்பொருத்தியுள்ளேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை. தேய்மானம் குறைவு. விபத்து அதிகம் நிகழாது. மின்காந்த துாண்டல் சக்தி மூலம் 'பிரேக்' செயல்படும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவாக இதை சமர்பிக்கிறேன், என்றார். மாணவியை பாராட்ட 98652 46473.மாணவியை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி நிறுவனர் சியாமளா வெங்கடேசன், தாளாளர் கே.வெங்கடேசன், முதல்வர் மலர்விழி பாராட்டினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி