மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.அதன்படி 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் வெறும் 7 வகையான ஊனங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 சதவீதமாக இருந்த மாற்றுத்திறனாளிகளின் இடஒதுக்கீடு 5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.மத்திய அரசின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த, வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 2022-ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு வகையான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் ரூ. 30 லட்சம் வரை கல்வி உதவித்தொகை பெற முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர் லோவ் வர்மா கூறினார்.மனநலக் குறைபாடு (டவுன் சின்ரோம்) உடையவர்களுக்கான 12-ஆவது சர்வதேச மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் லோவ் வர்மா பேசியது:
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.அதன்படி 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் வெறும் 7 வகையான ஊனங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 சதவீதமாக இருந்த மாற்றுத்திறனாளிகளின் இடஒதுக்கீடு 5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.மத்திய அரசின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த, வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 2022-ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு வகையான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் ரூ. 30 லட்சம் வரை கல்வி உதவித்தொகை பெற முடியும்.
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.அதன்படி 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் வெறும் 7 வகையான ஊனங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 சதவீதமாக இருந்த மாற்றுத்திறனாளிகளின் இடஒதுக்கீடு 5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.மத்திய அரசின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த, வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 2022-ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு வகையான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் ரூ. 30 லட்சம் வரை கல்வி உதவித்தொகை பெற முடியும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி