மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க பள்ளிகளில் விரைவில் சிறப்பு முகாம்: தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2015

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க பள்ளிகளில் விரைவில் சிறப்பு முகாம்: தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு

ஆதார் அட்டை இல்லாத மாண வர்களுக்கு வழங்கும் வகையில் பள்ளிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஏற்பாடு செய்து வருகிறது.தொடக்கக் கல்வி இயக்ககத் தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள் ளன.


இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிடமிருந்து தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தால் பெற்றோருக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டின் நகலை சேகரித்து தயாராக வைத்திருக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மாண வர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒப்புகைச்சீட்டு நகல் எண்ணிக்கை விவரங்களை மின்னஞ்சல் மூலம் 21-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி களுக்கு அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி