அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 6 ஆயுள் தண்டனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 6 ஆயுள் தண்டனை

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வி.பி.சிங் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (30). இவர் திருக்கனூர் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி சிறுமிகள் 3 பேரை அழைத்துச் சென்று அவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். இது குறித்துசிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.


இதனையறிந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று முறையிட்டதுடன் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து முதன்மை கல்வி அதிகாரி கலைச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதனையடுத்து ரவீந்திரகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து முதன்மை கல்வி அதிகாரி போலீஸில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் திருக்கனூர் போலீஸார் ரவீந்திரகுமார் மீது, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முதன்மை நீதிபதி கார்த்திகேயன் அளித்த உத்தரவில், ஆசிரியர் ரவீந்திரகுமாருக்கு 6 ஆயுள் சிறை தண்டனையுடன், 3 சிறுமியிடம் அத்துமீறிய குற்றத்துக்காக தலா மூன்று 10 ஆண்டுகள், மூன்று 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி