மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2015

மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார்.

மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான75 காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.


நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 125 பணியிடங்களில் 65 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.


கிருஷ்ணகிரி, திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு பரமக்குடி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்பட மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 65 இடங்களும் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளதாகவும், இவற்றை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி