80 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது: மாணவர் அமைப்பு கவலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2015

80 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது: மாணவர் அமைப்பு கவலை

தமிழகத்தில் எண்பது சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை தேவை' என, திண்டுக்கல் கருத்தரங்கில் 'இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மாரியப்பன் பேசினார்.


திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார்.இதில் மாநில துணை தலைவர் மாரியப்பன் பேசியதாவது: தமிழகத்தில் 6,823 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் 4,723 பார்கள் உள்ளன. ஆனால் மொத்தமுள்ள 56 ஆயிரத்து 300 பள்ளிகளில் 80 சதவீத கழிப்பறைகள் முறையான வசதிகள் இன்றி உள்ளன.


ஒதுக்குப்புறமாக காடுகளில் உள்ள 1,200 அரசு மாணவர் விடுதிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. குறிப்பாக மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதை அரசு கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் என, உள்ளிட்ட அறவழிகளில் போராட மாணவர்களை வலியுறுத்தியுள்ளோம். செப்., 4, 5, 6ல் புதுச்சேரியில் மதுவிலக்கு மாநாடு நடக்க உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி