8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் கிடைக்கவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2015

8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் 7,979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கானஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்களின் கீழ் 7,979 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவதற்கான அரசாணை எண் 175-ஐ நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.


ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க இதுவரை நீட்டிப்பு அரசாணை பிறப்பிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார். இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் திங்கள்கிழமையன்று உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர்.

50 ஆயிரம் பணியிடங்களை நிரந்தரமாக்க வேண்டும்:

கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தாற்காலிகப் பணியிடங்களாகவே உள்ளதால், ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச்சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வழக்கமாக, ஒரு நிதியாண்டில் தோற்றுவிக்கப்படும் தாற்காலிகப் பணியிடங்கள் அடுத்த சில நிதியாண்டுகளில் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும். ஆனால், 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக தாற்காலிகப் பணியிடங்களாகவே நீடிக்கிறது. இதை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்தப் பிரச்னையில் முதல்வர் தலையிட்டு ஆசிரியர்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என அந்தச் சங்கம் கோரியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி