ஆசிரியர் டிப்ளமோ: நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

ஆசிரியர் டிப்ளமோ: நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது.இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதற்காக அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்படாது.


முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கலந்தாய்வின் போது எடுத்துவர வேண்டும்இதில் பங்கேற்க வரும் மாணவர்கள் The Director, SCERT, Chennai-6 என்ற முகவரியில் ரூ.3,500-க்கான கேட்பு வரைவோலையை (டி.டி.) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி