குழந்தைகள் மொழி அறிதலை அளவிடும் ஜெர்மன் கருவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

குழந்தைகள் மொழி அறிதலை அளவிடும் ஜெர்மன் கருவி

காந்திகிராம பல்கலையில் ஜெர்மன் கருவி மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது.ஜெர்மன் லிப்னிஸ் ஹானோவர் பல்கலை, காந்திகிராம பல்கலை மனையியல் துறை இணைந்து குழந்தைகள் ஆய்வு மையத்தை அமைக்கின்றன.


இந்த மையம் மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு மேம்படுத்தப்படும். இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள ஜெர்மன் பல்கலையின் ஆய்வாளர்கள் கிருஷ்டன்பேட்டா, போடோ பிராங்க் ஆகியோர் காந்திகிராமத்திற்கு வந்தனர். அவர்கள் குழந்தைகளின் மொழி அறிதல் திறனை அளவிடும் பிரத்யேக கருவியை கொண்டு வந்துள்ளனர்.இந்த கருவியை பயன்படுத்தி காந்திகிராம குழந்தைகள் மையத்தில் முதற்கட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. மையத்தின் 4 திசைகளிலும் 'கேமரா' பொருத்தப்படும். அதில் மையத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ எடுக்கப்பட்டு கருவியில் பதிவு செய்யப்படும்.பின் ஒரு தனி'சாப்ட்வேர்' மூலம் குழந்தைகளின் மொழி அறியும் திறன் ஆய்வு செய்யப்படும்.
மனையியல் துறை பேராசிரியர் கவிதாமைதிலி கூறியதாவது: கருவியில் 2 மாதம் முதல் 2 வயது குழந்தைகளின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும். ஏற்கனவே இந்த கருவி மூலம் ஜெர்மன் ஆய்வாளர்கள் தான்சானியா நாட்டில் ஆய்வு செய்துள்ளனர். தற்போது இந்தியாவில் ஆய்வு செய்கின்றனர். இந்த கருவி மூலம் மையத்தில் பாதுகாவலர்களின் எந்தெந்த தூண்டுதலுக்கு குழந்தைகள் ஆர்வமாக கற்கின்றன என்பது ஆய்வு செய்யப்படும்.பின் பெரும்பான்மை குழந்தைகளின் மொழி அறியும் திறன் அடிப்படையில் புதிய கற்பித்தல் முறை தயாரிக்கப்பட்டு, பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி