செவிலியர் பட்டயப் படிப்பு: 9,401 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

செவிலியர் பட்டயப் படிப்பு: 9,401 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

தமிழக அரசு செவிலியர் பட்டயப் படிப்புக்கு 9,401 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள 23 செவிலியர் பள்ளிகளில் செவிலிய பட்டயப் படிப்புக்கான சேர்கைக்கு ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.


இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புக்கு மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தப் படிப்பில் சேருவதற்கு மொத்தம் 10,487 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.

இறுதிநாளின் முடிவில் 9,401 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை- கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்றுசேர்ந்தன.விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி