தமிழக கருவூல கணக்குத் துறை இயக்குனர் அறிக்கை:தமிழகம் முழுவதும் தாலுகா, மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், 'பயோ மெட்ரிக்' தகவல் சேகரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையங்களில், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு, 'ஆதார் எண்' வழங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், இதுவரை பதிவு செய்யாத, சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, இந்த மையங்களில், சமர்ப்பிக்க வேண்டும்.ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றில், தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.ஆதார் எண்ணுக்காக ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்களுக்கான அட்டை தயராகி விட்டதா என்பதை அறிய,www.resident.uidai.net.inஎன்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 'மின் ஆதார்' அட்டை பதிவிறக்கம் செய்ய,www.eaadhaar.gov.inஎன்ற வலைதளத்துக்கு செல்ல வேண்டும்.
Aug 13, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி