ரயில்வே பணிகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு… - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

ரயில்வே பணிகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு…


indian railway logoசீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் ஆகிய 3,273 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை இந்திய ரயில்வே துறை முதல் முதலாக நடத்துகிறது. 

ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நாடு முழுதும் இந்தத் தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) நடத்துகிறது.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 242 நகரங்களில் பொறியாளர்
பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தத் ஆன்லைன் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளன. கணினி அடிப்படையில் நடத்தப்படும் இந்த மிகப்பெரியத் தேர்வுக்கு இதுவரை சுமார் 18 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உறுதியளித்துள்ளது. 

இந்த ஆன்லைன் தேர்வு முறை பயனாளருக்கு சவுகரியமானதாக இருக்கும், தவறுகள் இல்லாத முறையில் அனைத்தும் நடைபெறும். 

தேர்வு எழுதுபவர்கள் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு எளிதில் செல்ல முடியும். மாநில மொழிகளிலும் வாசிக்கலாம், எழுதலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி