போதை மாணவர்களுக்கு பயிற்சி : அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2015

போதை மாணவர்களுக்கு பயிற்சி : அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

'மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தும், மாணவர்களை கண்காணித்து, அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள பயிற்சி அளிக்க வேண்டும்' என, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்விஇயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

சில வாரங்களுக்கு முன், கோவையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி, மது குடித்து விட்டு, பொது இடத்தில் ரகளை செய்தார். இந்தச் சம்பவம், ஆசிரியர் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதையில் ரகளை செய்த, நான்கு மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். கலெக்டர் உத்தரவின்படி, அந்த மாணவர்கள் திருந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போதைப் பொருட்களை, மாணவர்கள் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அதிகாரி களுக்கும், பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர்அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளார். 'ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர்கழகத்தினர் ஆகியோருடன் பள்ளி தலைமை ஆசிரியரும் இணைந்து, மாணவ, மாணவியரை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு போதைப் பழக்கம் தொற்றிக் கொள்ளாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. போதைப் பொருட்கள் பக்கம் அவர்கள் கவனம் செல்லாமல், படிப்பின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளான மாணவர்கள் அதில் இருந்து மீள, ஆசிரியர்கள் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.'இவ்வாறு, அந்தஅறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள்.பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளை சோதனை செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்யுங்கள்.பிறகு புத்திமதி கூறலாம். டாஸ்மாக்கை மூடுங்கள். டாஸ்மாக்கை மூடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி