சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க முடிவு

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை சுயநிதி தொழில் படிப்பு கல்லூரி கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ளது.


சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவதுபோல, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்செய்யப்பட்டது. அப்போது பி.எட். படிப்புக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 47,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் எம்.எட். உள்ளிட்ட பிற படிப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தாலும், பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகின்ற காரணத்தாலும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:பி.எட், எம்.எட், பி.பி.எட், எம்.பி.எட், டி.டி.எட். படிப்புகளை வழங்கிவரும்சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு 2015-16 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.


இதற்காக, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிடமிருந்து கல்விக் கட்டணப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை வருகிற 31-ஆம் தேதிக்குள் உரிய படிவத்தில் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இந்தப் பரிந்துரைகளுக்கான மாதிரி படிவத்தை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து கல்லூரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி