கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அதுகுறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.


நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'மாணவர்களின் நிதித் தேவை, கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்காக விசேஷமான தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆணையம் அமைக்கப்படும்' என்றார்.அதன் ஒரு விளைவாக, www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தை மத்திய நிதித்துறை, சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய, ஐந்து வங்கிகளுக்கு, கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.


அதற்கான விண்ணப்பம், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, வங்கிக் கடன் விவரம் போன்ற அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து வங்கிகளுடன், மேலும், 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. விரைவில் அனைத்து வங்கிகளும் இந்த இணையதளத்தில் சேரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி